நாங்கள் யார்?

நாங்கள் யார்?

‘அசனி வொய்ஸ்’ என்பது இலங்கை சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும். முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் எதிராக கட்டுரைகள் மற்றும் பிரசுரங்களை வெளியிடுவதற்கு எங்களை நாங்கள் அர்ப்பணிக்கிறோம். புரட்சிகர அரசியலில் ஒரு உண்மையான சர்வதேசிய முன்மொழிவை வழங்குவதும், உலகப் புரட்சியின் பரந்து பட்ட கட்டமைப்பிற்குள் தெற்காசிய தொழிலாள வர்க்கத்தின் அசைவுகளை ஆராய்வதும்தான் எங்களின் நோக்கமாகும். தெருக்களிலும், பணியிடங்களிலும் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோரே நாங்கள் ஆகும். நாங்கள் பல்லின, பல பாலின மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்டவர்கள்.

சந்தைகளும், தொழில்நுட்பமும் மனிதகுலத்தின் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்கும் என்று நாங்கள் நம்பவில்லை. பிரச்சினை செயற்பாட்டு முறைமை சம்பந்தப்பட்டது: அதாவது மூலதனக் குவிப்பு, அதன் முடிவில்லா வளர்ச்சி மற்றும் அதன் அபரிமிதமான கழிவுகள் என்பனவாகும்.

மூலதனக் குவிப்பு, மனிதர்கள் வாழக்கூடிய இடமான புவி அமைப்பை(இயற்கை) அழித்து வருகிறது. எனவே, நாம் முதலாளித்துவத்தை ஒருமுடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இன்று நமக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன:  அதாவது “அழிவு” அல்லது “புரட்சி”.

‘அசனி வொய்ஸ்’ உழைக்கும் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகளுக்கும் பொருத்தமான தலைப்புகளை உள்ளடக்கியது.

எங்கள் போராட்டத்திற்கான பிரச்சினைகள்:-

தேசங்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தெற்காசியாவில் சாதிவெறி (சாதி அமைப்பு) மற்றும் இனவெறி இவைகளுக்கு எதிரான இயக்கத்தைக் கட்டியெழுப்புவது.

உலகில் உள்ள சோசலிச அமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கான போர்க்குணமிக்க பத்திரிக்கை ஒன்றின் அவசியத்தை  ‘அசனி வொய்ஸ்’ முன்மொழிகிறது.

நாம் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சோசலிச சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். மனிதனின் உயிர் வாழ்தலும்(இருப்பும்) கிரகத்தின்(பூமி)இருப்பும் ஒன்று மற்றொன்றில் தங்கியுள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

முதலாளித்துவ, ஏகாதிபத்தியம் மற்றும் வர்க்க ஒத்துழைப்பின் அனைத்து வகையான கட்சிகளுக்கும் அப்பால் நமது பணி சுயாதீனமாக இருக்க வேண்டும்.

எல்லைகள், பொருளாதாரத் தடைகள், சதித்திட்டங்கள் மற்றும் முழு ஏகாதிபத்திய இயந்திரம் ஆகியவற்றைக் கட்டமைத்து நிதி வழங்கும் அரசியல் கட்சிகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

நமது போராட்டம் தெற்காசிய ஐக்கிய சோசலிஸ்ட் யூனியனை உருவாக்குவதுடன், உலகில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைக்க  புதிதாக சர்வதேச புரட்சிகர கம்யூனிஸ்டுக்கான அணியொன்றை  முன்மொழிவதுமாகும்.

உழைக்கும் வர்க்கத்தையும்,  அவரவர் பணியிடங்களில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதன் ஊடாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து,  தற்போதைய செயற்பாட்டு முறைமையை தடுத்து நிறுத்தி,  ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதனையும் நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் தொழிற்சங்கங்களில் பங்கேற்கிறோம்.  ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக போராடுகிறோம்.

நாங்கள் சோசலிச பெண்ணியம், சுற்றுச்சூழல், இனவெறிக்கு எதிரான இயக்கங்கள், LGBTQ மற்றும் உலகில் உள்ள புலம்பெயர்ந்தோர் உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளில் ஒரு அங்கமாக உள்ளோம்.

‘அசனி வொய்ஸ்’ பெரும்பாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் வழிநடத்தப்படும் சமூக அதிகாரத்துவங்களுக்கு எதிராக போராடுகிறது.

தோழர்களே,

எங்களின் குறிக்கோள் சமரசமற்றதுடன் ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதுமே ஆகும். முதலாளித்துவத்தையும் அனைத்து வகையான மதவெறியையும் தோற்கடிக்க எங்களுடன் ஒன்றிணையுங்கள்!

Related posts